/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில் தேரோட்டம் மாட வீதிகளில் அசைந்து வந்த தேர்

ADDED : மே 22, 2024 08:01 AM

நயினார்கோவில் : பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழாவில் நான்கு மாட வீதிகளில் சுவாமி, அம்மன் ஆடி அசைந்து தேரில் வலம் வந்தனர்.
மூர்த்தி, தீர்த்தம் ஸ்தலம் என்ற பெருமை பெற்ற நயினார்கோவில் சவுந்தரநாயகி சமேத நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் பல்வேறு தோஷம் நீங்க வேண்டி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
இக்கோயிலில் வசந்த உற்சவ விழா மே 13 காலை கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். நேற்று காலை 8:00 மணிக்கு நாகநாத சுவாமி பிரியா விடையுடனும், சவுந்தர்ய நாயகி அம்பாள் தனியாகவும் தேரில் அமர்ந்தனர். மேலும் விநாயகர், முருகன் வள்ளி, தெய்வானை தேரில் முன் செல்ல பஞ்ச மூர்த்திகளுடன் நான்கு மாட வீதிகளில் தேர் ஆடி அசைந்து சென்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து ஹர ஹர, சிவ சிவ கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் இழுத்தனர். சிவ கைலாய வாத்தியம் முழங்க அடியார்கள் தேரின் முன் சென்றனர்.
தொடர்ந்து தேர் நிலையை அடைந்ததும் சுவாமி, அம்பாள் கோயிலில் எழுந்தருளி தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு நீர், மோர் மற்றும் பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.