/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் நகர், கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வருது.. ஆனா வரல...
/
ராமநாதபுரம் நகர், கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வருது.. ஆனா வரல...
ராமநாதபுரம் நகர், கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வருது.. ஆனா வரல...
ராமநாதபுரம் நகர், கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வருது.. ஆனா வரல...
ADDED : மார் 24, 2024 01:01 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் வழங்க வேண்டிய அளவைக் காட்டிலும் 10 லட்சம் லிட்டர் குறைவாக விநியோகிப்பதால் நகர், கிராமங்களில் குடிநீர் பிரச்னை தொடர்கிறது. லாரிகளில் குடம் ரூ.12க்கு வாங்கி மக்கள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் 2009ம் ஆண்டில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு ரூ.616 கோடியில் செயல்படுத்தப்பட்டது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இத்திட்டத்தில் 5 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 3163 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
ஊரகப் பகுதிகளுக்கு தினமும் 17.18 லட்சம் லிட்டர், பேரூராட்சி பகுதிகளுக்கு 4 லட்சம் லிட்டர், நகராட்சி பகுதிகளுக்கு 14.82 லட்சம் லிட்டர் குடிநீர் தற்போது விநியோகம் செய்யப்படுகிறது.
இருப்பினும் பெயரளவில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் பராமரிப்பு பணியால் தற்போது வரை நகர், கிராமங்களுக்கு முழுமையாக குடிநீர் வழங்கவில்லை. ஊருணி, கண்மாய்களில் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் கோடை காலம் மட்டுமின்றி பொதுவாக மாவட்டத்தில் அனைத்து நாட்களிலும் மக்கள் குடிநீருக்காக குடங்களுடன் அலைய வேண்டியுள்ளது.
தற்போது ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் வழக்கத்தை விட 10 லட்சம் லிட்டர் குடிநீர் குறைவாக வழங்கப்படுகிறது. இதனால் நகர், கிராமங்களில் காவிரி குடிநீர் 2 முதல் 3 நாட்களுக்கு ஒருமுறை பெயரளவில் வருகிறது. மக்கள் குடிநீரை லாரிகளில் குடம் ரூ.12க்கு விலைக்கு வாங்கி சிரமப்படுகின்றனர்.
இனி வரும் கோடைக்காலத்தில் மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் ண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
---

