/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி புதுநகரில் 24 ஆண்டிற்கு பின் குடிநீர் குழாய் பதிக்கும் பணி
/
பரமக்குடி புதுநகரில் 24 ஆண்டிற்கு பின் குடிநீர் குழாய் பதிக்கும் பணி
பரமக்குடி புதுநகரில் 24 ஆண்டிற்கு பின் குடிநீர் குழாய் பதிக்கும் பணி
பரமக்குடி புதுநகரில் 24 ஆண்டிற்கு பின் குடிநீர் குழாய் பதிக்கும் பணி
ADDED : ஜூன் 06, 2024 05:11 AM

பரமக்குடி : -தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக பரமக்குடி நகராட்சி புதுநகரில் 24 ஆண்டுகளுக்கு பின் நகராட்சி சார்பில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது.
பரமக்குடி நகராட்சியில் 2-வது வார்டாக புதுநகர் உள்ளது. முன்பு மஞ்சள்பட்டணம், வைகை நகர், புது நகர் என ஒரே வார்டாக இணைந்து இருந்தது.
வார்டு மறு வரையறைக்கு பின் ஒவ்வொரு பகுதியும் ஒரு வார்டாக பிரிக்கப்பட்டு புதுநகர் இரண்டாவது வார்டாக மாறியது.
இதன்படி 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இங்கு கடந்த 2000 ஆண்டில் நகராட்சி குடிநீர் இணைப்புக்கு வைப்பு தொகையாக ரூ.2500 பலர் செலுத்தி உள்ளனர். தற்போது ரூ.10 ஆயிரம் வரை கூட பலர் வைப்பு நிதி செலுத்தி உள்ளனர்.
ஆனால் 24 ஆண்டுகளாக குடிநீர் வழங்கப்படாத சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
ஆனால் அதுவும் காட்சி பொருளான சூழலில் மக்கள் சிறுநீரை விலை கொடுத்து வாங்கி வந்தனர்.
இது குறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி துவங்கி நடக்கிறது.
ஆகவே குடிநீர் குழாயை முறையாக பதிக்க அதிகாரிகள் கவனம் செலுத்தி தண்ணீரை விரைந்து வழங்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

