/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பா.ஜ., வுடன் கள்ள கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க., டிபாசிட் இழக்க வேண்டும் அப்துல் சமது எம்.எல்.ஏ., பேச்சு

ADDED : மார் 28, 2024 06:20 AM
ராமநாதபுரம்: பா.ஜ., வுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க., வை டிபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று ராமநாதபுரத்தில் நடந்த மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அப்துல் சமது எம்.எல்.ஏ., பேசினார்.
நிர்வாகிகள் கூட்டத்திற்கு மாநில துணை பொதுச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் தலைமை வகித்தார். தி.மு.க., மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி உட்பட நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.
மாநில பொது செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ., பேசியதாவது:
தற்போது நடப்பது முக்கியமான தேர்தல். நமது வழிபாட்டு உரிமையை பாதுகாக்கும் தேர்தல். எல்லா தியாகத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். அ.தி.மு.க., வின் பழனிசாமி பா.ஜ., கட்சி குறித்து கள்ள மவுனம் சாதித்து வருகிறார்.
பாசிச பா.ஜ., கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம், விவசாயிகளுக்கு எதிரான சட்டம் என பல்வேறு சட்டங்களுக்கு ஆதரவு தந்தார். பஞ்சாப் விவசாயிகள் 200 பேர் உயிரைக் கொடுத்து விவசாய சட்டத்தைப் பின் வாங்க செய்தனர்.
தொடர்ந்து இந்த சட்டம் குறித்து போராடி வருகின்றனர். இத்தனையும் செய்துவிட்டு பா.ஜ., வுடன் கள்ள கூட்டணிக்கு தயாராகும் அ.தி.மு.க., பாசிச பா.ஜ., கட்சிகளை டிபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்றார்.