/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிரசாரத்தில் தீவிரம் காட்டாத நிர்வாகிகள்
/
பிரசாரத்தில் தீவிரம் காட்டாத நிர்வாகிகள்
ADDED : ஏப் 12, 2024 10:43 PM
தேவிபட்டினம் : ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணி கட்சி சார்பில் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி, அ.தி.மு.க., சார்பில் வேட்பாளர் ஜெயபெருமாள், பா.ஜ., கூட்டணி கட்சி வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திருவாடானை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, தேவிபட்டினம், தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரதான கட்சி வேட்பாளர்கள் சில நாட்களுக்கு முன்பு பிரசாரம் மேற்கொண்டனர்.
வேட்பாளர்கள் முழுமையாக அனைத்து பகுதிகளுக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது.
அதனால் ஒவ்வொரு தொகுதியிலும் நகர் பகுதிகளில் மட்டும் பிரதான வேட்பாளர்கள் பிரசாரம் செய்துவிட்டு மற்றபகுதிகளுக்கு உள்ளூர் ஒன்றிய, நகர நிர்வாகிகள் மூலம் பிரசாரம் மேற்கொள்ள வலியுறுத்தினர்.
இந்நிலையில், வேட்பாளர் வருகையின் போது மட்டும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டிய உள்ளூர் நிர்வாகிகள் அதன் பின் பிரசாரத்தில் ஈடுபடாமல் சோர்வாக உள்ளனர்.
திருவாடானை தொகுதியில் 80 சதவீதம் பகுதிகளுக்கு அ.தி.மு.க., மற்றும் ஓ.பி.எஸ்., சார்பில் வேட்பாளர்களின் சின்னம் குறித்த துண்டு பிரசுரம் கூட வழங்காத நிலையில் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.

