/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீட்டில் செம்மரக் கட்டைகளை பதுக்கிய வழக்கில் ஒருவர் கைது
/
வீட்டில் செம்மரக் கட்டைகளை பதுக்கிய வழக்கில் ஒருவர் கைது
வீட்டில் செம்மரக் கட்டைகளை பதுக்கிய வழக்கில் ஒருவர் கைது
வீட்டில் செம்மரக் கட்டைகளை பதுக்கிய வழக்கில் ஒருவர் கைது
ADDED : மார் 28, 2024 01:43 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் வீட்டில் செம்மரக்கட்டைகளை பதுக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த அஜ்மல் கான் 43, நான்கு ஆண்டுகளுக்கு பின் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
2020ல் திருவாடானையைச் சேர்ந்த அஜ்மல்கான் வீட்டில் 36 செம்மரகட்டைகள் பதுக்கி வைத்திருந்தார். வனத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்த போது அஜ்மல்கான் தலைமறைவாகி விட்டார். அவரை வனத்துறையினர் தொடர்ந்து தேடினர்.
இதற்கிடையில் மாவட்ட வன அலுவலர் ேஹமலதாவிற்கு வந்த தகவலின் பேரில் 4 ஆண்டுகளுக்கு பிறகு திருவாடானை அருகே வீரசங்கலிமடம் கிராமத்தில் அவரது வீட்டிற்கு வந்த அஜ்மல்கானை வனச்சரகர் நித்தியகல்யாணி, வனகாப்பாளர் மரியதாஸ் குழுவினர் கைது செய்தனர்.