/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீ
/
குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீ
ADDED : ஜூலை 25, 2024 04:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி- தெற்கு முதுகுளத்துார் ரோடு குண்டாறு ஆற்றுப்படுகை அருகே குப்பை கிடங்கு உள்ளது. கமுதி பேரூராட்சி பகுதி குப்பை சேகரிக்கப்பட்டு இங்கு குவிக்கப்படுகிறது. இதில் நேற்று தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் குப்பை அனைத்தும் எரிய ஆரம்பித்தது.
கமுதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன், நாகநாதன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் இடைவெளிக்கு பின் குப்பை கிடங்கில் பற்றிய தீயை முழுவதுமாக அணைத்தனர். அப்போது குண்டாறு ஆற்றுப்படுகை அருகே இருந்த பருத்தி செடிகள் மற்றும் வீடுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

