/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தமிழகத்தில் 82 எய்ட்ஸ் பரிசோதனை மையங்கள் மூடல்
/
தமிழகத்தில் 82 எய்ட்ஸ் பரிசோதனை மையங்கள் மூடல்
ADDED : ஏப் 13, 2024 02:21 AM
ராமநாதபுரம்,:மத்திய அரசின் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் பரிந்துரையால் திட்ட காலக்கெடு முடிந்ததாக கூறி தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வந்த 82 எய்ட்ஸ் பரிசோதனை மையங்கள், நம்பிக்கை ஆலோசனை மையங்கள் முதல் கட்டமாக மூடப்பட்டுள்ளன. இதனால் எச்.ஐ.வி., விழிப்புணர்வு இல்லாமல் பரவும் அபாயம் உள்ளது.
தமிழகத்தில் 377 எய்ட்ஸ் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வந்தன. இதில் 82- நம்பிக்கை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக 104- மையங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் எச்.ஐ.வி-., தொற்றாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஆலோசனை தடைபடும். இதன் விளைவாக சமூகத்தில் எச்.ஐ.வி -எய்ட்ஸ் தொற்று பரவும் விகிதம் அதிகமாகி எதிர்மறையான சமூக விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
ஒவ்வொரு மையத்திலும் ஆலோசகர்கள் மற்றும் ஆய்வக நுட்புனர்கள் எச்.ஐ.வி -எய்ட்ஸ் ஆலோசனை மற்றும் பரிசோதனை மட்டும் பார்க்காமல் பால்வினை நோய் பிரிவு, ஏ.ஆர்.டி மையம் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கான நல மையம் உள்ளிட்ட பணிகளை கூடுதலாக கவனித்து வருகின்றனர்.
தற்போது இந்த நம்பிக்கை மையங்களை மூடினால் மேற்கூறிய அனைத்து பணிகளும் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது. இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

