/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
/
ராமநாதபுரத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
ராமநாதபுரத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
ராமநாதபுரத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
ADDED : ஏப் 21, 2024 04:11 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ராமநாதபுரம் அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கல்லுாரியில் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கும் பணிகள் நடந்தது.
இதில் கலெக்டர் விஷ்ணுசந்திரன், தேர்தல் பார்வையாளர் பொது பண்டாரியாதவ், வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட பிரமுகர்கள் முன்னிலையில் 1934 ஓட்டுப்பதிவு மையங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, விண்ணப்ப படிவங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சட்டசபை வாரியாக பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.
மூன்றடுக்கு பாதுகாப்பு: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு மத்திய பாதுகாப்பு படை, தமிழ்நாடு போலீஸ், சிறப்பு பட்டாலியன் போலீசார் 261 பேர் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள பகுதியிலும், அதற்கு அடுத்த பகுதியில் சிறப்பு பட்டாலியன் படையினரும், தமிழ்நாடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இவர்களுடன் தீயணைப்புத்துறையினர் அதி நவீன வாகனங்களுடன் காண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கல்லுாரி முழுவதும் 260 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகின்றன.
சந்தீஷ் எஸ்.பி., கோவிந்தராஜூலு டி.ஆர்.ஓ., பரமக்குடி சப் கலெக்டர் அபிலாஷாகவுர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

