/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
அனுமதியின்றி நர்சிங் கல்லுாரி அதிகாரிகள் ஆய்வில் அம்பலம்
/
அனுமதியின்றி நர்சிங் கல்லுாரி அதிகாரிகள் ஆய்வில் அம்பலம்
அனுமதியின்றி நர்சிங் கல்லுாரி அதிகாரிகள் ஆய்வில் அம்பலம்
அனுமதியின்றி நர்சிங் கல்லுாரி அதிகாரிகள் ஆய்வில் அம்பலம்
ADDED : பிப் 09, 2024 02:00 AM
பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், செங்குந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி, ஜெயங்கொண்டம் மேல வெள்ளாளர் தெருவில், அன்னை மாதா எஜிகேஷனல் டிரஸ்ட் என்ற பெயரில், 'அமெட்' எனும் நர்சிங் கல்லுாரி நடத்தி வருகிறார்.
இதில், 45 மாணவியர் படிக்கின்றனர். இக்கல்லுாரி அரசு அங்கீகாரம் பெறாமல் நடத்தப்படுவதாக சுகாதாரத் துறைக்கு புகார் சென்றது. அரியலுார் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாரிமுத்து தலைமையில், சுகாதாரத்துறை அலுவலர்கள் நேற்று இக்கல்லுாரியில் ஆய்வு செய்தனர்.
அதில், இக்கல்லுாரி அரசு அங்கீகாரம் பெறாமல், இரண்டு ஆண்டு டிப்ளமா நர்சிங் பாடப்பிரிவு நடத்தி வந்தது தெரிந்தது. ஜெயங்கொண்டம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில், சுகாதாரத்துறை சார்பில் புகார் செய்யப்பட்டது.
இங்கு படிக்கும் மாணவியர் பிற கல்வி நிறுவனங்களில் பயில நடவடிக்கை எடுக்கப்படும் என, சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாரிமுத்து தெரிவித்தார்.