/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
தமிழ்நாடு 'ஸ்டிக்கர்' ஒட்டிய நா.த.க.,வினர் 26 பேர் கைது
/
தமிழ்நாடு 'ஸ்டிக்கர்' ஒட்டிய நா.த.க.,வினர் 26 பேர் கைது
தமிழ்நாடு 'ஸ்டிக்கர்' ஒட்டிய நா.த.க.,வினர் 26 பேர் கைது
தமிழ்நாடு 'ஸ்டிக்கர்' ஒட்டிய நா.த.க.,வினர் 26 பேர் கைது
ADDED : டிச 27, 2025 08:00 AM

பெரம்பலுார்: பெரம்பலுாரில் அரசு பஸ்களில் தமிழ்நாடு என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரசு போக்குவரத்து பஸ்களில் தமிழ்நாடு என்ற வார்த்தை சேர்க்கப்படாமல், அரசு போக்குவரத்து கழகம் என எழுத்தப்பட்டு உள்ளது.
இதை கண்டித்து, அரசு பஸ்சில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம், நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று நடந்தது.
பெரம்பலுார் புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் பாலக்கரை பகுதியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று, அரசு பஸ்களில் தமிழ்நாடு என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை ஒட்டிய கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கீர்த்திவாசன் உட்பட 26 பேரை பெரம்பலுார் போலீசார் கைது செய்தனர்.