/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நடமாடும் விற்பனை வண்டி நடைபாதையில் எதற்கு?
/
நடமாடும் விற்பனை வண்டி நடைபாதையில் எதற்கு?
ADDED : பிப் 28, 2024 12:19 AM

ஊட்டி;ஊட்டி கார்டன் சாலை நடைபாதையில் இடையூறாக 'நடமாடும்' விற்பனை வண்டிகளை நிறுத்தி உள்ளதால், மக்கள் நடந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில், சுற்றுலா பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் சென்று வருகின்றனர். போக்குவரத்து நிறைந்து காணப்படும் இச்சாலை ஓரத்தில், நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில், மக்கள் சென்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடைபாதையில் கடைகள் வைக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் சாலையில் நடந்து சென்றனர். மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், நடைபாதையில் வைக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.
இந்நிலையில், மீண்டும் அதே நடைபாதையில், தோட்டக்கலை துறை மூலம், காய்கறி மற்றும் பழங்கள் விற்பதற்காக வழங்கப்பட்ட நடமாடும் விற்பனை வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், சுற்றுலாப் பயணிகள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மக்கள் கூறுகையில், 'இப்பகுதி நடைபாதையில் உள்ள அனைத்து கடைகளையும் அகற்றி, அவர்களுக்கு நகராட்சியில் கட்டப்பட்ட கடைகளை வழங்க வேண்டும். நடைபாதைகளில் தடை இல்லாமல் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

