/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நாம் தமிழர் கட்சியினர் ஊட்டியில் போராட்டம்
/
நாம் தமிழர் கட்சியினர் ஊட்டியில் போராட்டம்
ADDED : டிச 30, 2025 07:01 AM
ஊட்டி: 'ஊட்டியில் இயக்கப்படும் அரசு பஸ்களில், 'தமிழ்நாடு' ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்,' என, வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்பட்டு வரும் அரசு பஸ்களில், அரசு போக்குவரத்து கழகம் கோவை என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டபட்டுள்ளன. 'அரசு போக்குவரத்து கழகம் என்ற ஸ்டிக்கருக்கு முன், தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்,' என, நாம் தமிழர் கட்சியினர் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஊட்டியில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அரசு பஸ்களில், தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர்களை ஒட்டினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

