/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரோஜா பூங்காவில் 'புரூனிங்' செடிகளுக்கு தண்ணீர்
/
ரோஜா பூங்காவில் 'புரூனிங்' செடிகளுக்கு தண்ணீர்
ADDED : பிப் 20, 2024 10:54 PM

ஊட்டி';ஊட்டி ரோஜா பூங்காவில் 'புரூனிங்' செய்யப்பட்ட செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.
ஊட்டி ரோஜா பூங்காவில், 4000 ரோஜா வகைகளில், 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரோஜா செடிகள் உள்ளன.
கோடை சீசனுக்காக, பூங்காவில் உள்ள அனைத்து பாத்திகளிலும் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்ட பகுதிகளில், தற்போது, புரூனிங்' பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 'புரூனிங்' செய்யப்பட்ட செடிகளுக்கு இயற்கை உரம் இடப்பட்டு வருகிறது. உரம் கலந்த தண்ணீரும் பாய்ச்சப்பட்டு வருகிறது.
தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில்,'' நடப்பாண்டு கோடை சீசனுக்காக ரோஜா பூங்கா தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக.'புரூனிங்' செய்யப்பட்ட செடிகள் பராமரிக்கப்பட்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது,'' என்றார்.

