/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலைப்பாதையில் நீர் வீழ்ச்சி; சுற்றுலா பயணிகள் குதுாகலம்
/
மலைப்பாதையில் நீர் வீழ்ச்சி; சுற்றுலா பயணிகள் குதுாகலம்
மலைப்பாதையில் நீர் வீழ்ச்சி; சுற்றுலா பயணிகள் குதுாகலம்
மலைப்பாதையில் நீர் வீழ்ச்சி; சுற்றுலா பயணிகள் குதுாகலம்
ADDED : நவ 05, 2024 11:15 PM

குன்னுார்; குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையோர மலைகளில் காணப்படும் நீர் வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக நள்ளிரவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
பல நாட்களாக வறண்டு காணப்பட்ட நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
குறிப்பாக, குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையோரம் உள்ள மலைகளில் இருந்து நீர்வீழ்ச்சிகள் புத்துயிர் பெற்றுள்ளன.
குறிப்பாக, லாஸ் நீர்வீழ்ச்சி, மரப்பாலம், குரும்பாடி, மலை ரயில்பாதையில், ஹில் குரோவ், மரப்பாலம், ஆர்டர்லி உள்ளிட்ட பல்வேறு நீர்வீழ்ச்சிகளும் புத்துயிர் பெற்றுள்ளன. இவ்வழியாக வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி 'செல்பி' மற்றும் புகைப்படங்களை எடுக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில்,'குன்னுார் மலைப்பாதையில் பல்வேறு நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் அதிகரித்துள்ளது. பயணிகள் நீர் வீழ்ச்சிகளை பார்த்து ரசிப்பதுடன் செல்ல வேண்டும். பாறைகளில் சென்று நீர் தேக்கத்தில் இறங்குவது; குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது. அவ்வாறு ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

