/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் இருவர் பலி
/
ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் இருவர் பலி
ADDED : மார் 13, 2024 10:15 PM
அன்னூர் : சிறுமுகை அருகே தனியார் பவுண்டரியில் பணிபுரிந்து வந்தவர்கள் உத்தம பாளையத்தை சேர்ந்த ராஜகோபால், 47. எஸ்.புங்கம்பாளையத்தை சேர்ந்த திருவேங்கட மூர்த்தி, 48. இவர்கள் இருவரும் நேற்று மாலை 4:30 மணிக்கு அன்னூரில் இருந்து, கோவை ரோட்டில், புதிதாக வாங்கிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர்.
திருவேங்கிட மூர்த்தி ஸ்கூட்டரை ஓட்டினார். மைல் கல் அருகே செல்லும்போது கோவையிலிருந்து அன்னூர் நோக்கி வந்த கார் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரும் கோவில்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தனர். அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த அல்லிக்காரம்பாளையத்தைச் சேர்ந்த கணேஷ் குமார், 45. என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

