/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிம்ஸ் பூங்காவுக்கு ஓராண்டில் வந்த சுற்றுலா பயணிகள்... 5.88 லட்சம் பேர்!கடந்த ஆண்டை விட 38 ஆயிரம் பேர் அதிகரிப்பு
/
சிம்ஸ் பூங்காவுக்கு ஓராண்டில் வந்த சுற்றுலா பயணிகள்... 5.88 லட்சம் பேர்!கடந்த ஆண்டை விட 38 ஆயிரம் பேர் அதிகரிப்பு
சிம்ஸ் பூங்காவுக்கு ஓராண்டில் வந்த சுற்றுலா பயணிகள்... 5.88 லட்சம் பேர்!கடந்த ஆண்டை விட 38 ஆயிரம் பேர் அதிகரிப்பு
சிம்ஸ் பூங்காவுக்கு ஓராண்டில் வந்த சுற்றுலா பயணிகள்... 5.88 லட்சம் பேர்!கடந்த ஆண்டை விட 38 ஆயிரம் பேர் அதிகரிப்பு
ADDED : ஏப் 02, 2024 01:45 AM

குன்னுார்;குன்னுார் சிம்ஸ் பூங்காவுக்கு கடந்த ஓராண்டில், 5 லட்சத்து 88 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தோட்டக் கலை துறையின் கீழ் செயல்படும், ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னுார் சிம்ஸ்பூங்கா அதிகளவில வருகை தருகின்றனர்.
கடந்த ஆண்டு மார்ச், 31 வரை ஓராண்டில், 5.50 லட்சம் சுற்றுலா பயணிகள் சிம்ஸ்பூங்காவிற்கு வருகை தந்தனர். 2023 ஏப்., 1ம் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை ஓராண்டில், 5.88 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
கடந்த ஓராண்டில், 38 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கூடுதலாக வருகை தந்துள்ளனர். அதில், கடந்த ஒரு வார காலமாக, 3 மடங்கு சுற்றுலா பயணிகள் அதிகரித்தனர். மரங்கள் சூழ்ந்த பகுதிகளில் நின்று புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர். படகு இல்ல ஏரியில் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
பழ கண்காட்சி ஏற்பாடு
கோடை சீசனில், முக்கிய நிகழ்வாக மே, 24 முதல்,26 வரை 64வது பழ கண்காட்சி நடக்கும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதம், 3.14 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி துவங்கியது.
இதில், 'ஆன்ட்ரினம், சால்வியா, பால்சம், பெகோனியா, மேரிகோல்டு, பிரஞ்ச் மேரிகோல்டு, பேன்சி, பிளாக்ஸ், பெட்டூனியா, ஸ்டாக்ஸ், கேலன்டுலா, லேடிலேஸ், அமரான்ஸ், ப்ரிமுளா, கிளியோம், ஆஸ்டர், லுாபின், டேலியா,' ஆகிய மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அமெரிக்கா, ஜப்பான், நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து, 30 மலர் செடி வகைகளில், 125 ரக மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத் துறையினர் கூறுகையில், 'குன்னுார் சிம்ஸ் பூங்காவில், வரும், ஏப்., மே மாதங்களில் கோடை சீசன் மற்றும், பழ கண்காட்சியையொட்டி நடவு செய்த நாற்றுகள் தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கப்பட்டு வருகிறது.
'மேலும், 5,000 தொட்டிகளில் மலர் நாற்றுகள் நடவு செய்து தயார்படுத்தப்படுகிறது. தற்போதே கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும்,'' என்றனர்.

