/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி அருகே பைக்காரா ஏரியில் சவாரி செய்ய பயணிகள் ஆர்வம்
/
ஊட்டி அருகே பைக்காரா ஏரியில் சவாரி செய்ய பயணிகள் ஆர்வம்
ஊட்டி அருகே பைக்காரா ஏரியில் சவாரி செய்ய பயணிகள் ஆர்வம்
ஊட்டி அருகே பைக்காரா ஏரியில் சவாரி செய்ய பயணிகள் ஆர்வம்
ADDED : நவ 22, 2024 11:20 PM
ஊட்டி: ஊட்டி அருகே பைக்காரா ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதில், ஆர்வம் கட்டி வருகின்றனர்.
பைக்காரா ஏரியில், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் சவாரி செய்ய ஏதுவாக, வாட்டர் ஸ்கூட்டர், ஸ்பீட் போட் உட்பட பல்வேறு படகுகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக, ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்துள்ள நிலையில், பைக்காரா ஏரியில், 100 அடிக்கு 70 அடி வரை தண்ணீர் இருப்பு உள்ளது.
வனம் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரியின் தண்ணீர் சுத்தமாக இருப்பதாலும், இயற்கை சூழல் நிறைந்து காணப்படுவதாலும், சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை கண்டுக்களித்தவாறு ஆர்வத்துடன், படகு சவாரி செய்கின்றனர். வார இறுதி நாட்களில், பார்வையாளர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.