/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானை நடமாட்டத்தை தடுக்க கிராமங்களை சுற்றி அகழி அமைக்கணும்; தோடர் பழங்குடியினர் வலியுறுத்தல்

ADDED : ஆக 05, 2025 10:31 PM
ஊட்டி; வனப்பகுதிகளை ஒட்டிய குடியிருப்புக்குள் யானை புகுவதை தடுக்க கோரி, சோலார் மின்வேலி, அகழி அமைக்க வலியுறுத்தி, தோடர் பழங்குடியின மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
நீலகிரியின் பூர்வ குடிகளான தோடர் இன மக்கள் கொடுத்த மனு:
ஊட்டி சுற்றுவட்டார பகுதியில் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் தோடர் இன பழங்குடியின மக்களாகிய நாங்கள் வசித்து வருகிறோம். ஊட்டி வடக்கு மற்றும் தெற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட துக்கார்மந்து, கல்மந்து, ஏப்பகோடுமந்து, கோவில்மந்து, தல்பதேரி மந்து உட்பட பல்வேறு மந்துகளில் கடந்த சில நாட்களாக யானைகள் தொந்தரவு அதிகரித்துள்ளது.
இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்கு அருகில் மட்டும் வந்த யானைகள் தற்போது பகல் நேரங்களிலேயே, வீடுகளுக்குள் புகுந்து வீட்டை சூறையாடுகின்றன. ஊருக்குள் வரும்போது கண்ணில் படுபவர்களை தாக்குவதற்கு யானைகள் விரட்டுகின்றன.
குடியிருப்புகளை ஒட்டி உள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்து சாகுபடியை சேதம் செய்து பெரும் நஷ்டம் ஏற்படுத்துகின்றன.
எனவே, குடியிருப்பு மற்றும் விவசாய தோட்டத்திற்குள் யானைகள் புகுவதை தடுக்க கிராமங்களை சுற்றி அகழி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.