sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீலகிரி விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட... தேயிலைக்கு விலை வேண்டும்!கோர்ட் உத்தரவை செயல்படுத்த எதிர்பார்ப்பு

/

நீலகிரி விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட... தேயிலைக்கு விலை வேண்டும்!கோர்ட் உத்தரவை செயல்படுத்த எதிர்பார்ப்பு

நீலகிரி விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட... தேயிலைக்கு விலை வேண்டும்!கோர்ட் உத்தரவை செயல்படுத்த எதிர்பார்ப்பு

நீலகிரி விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட... தேயிலைக்கு விலை வேண்டும்!கோர்ட் உத்தரவை செயல்படுத்த எதிர்பார்ப்பு


ADDED : ஆக 23, 2024 02:36 AM

Google News

ADDED : ஆக 23, 2024 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னூர்:'பசுந்தேயிலைக்கு வழங்கப்படும் மாதாந்திர விலை நிர்ணயத்தில், கோர்ட் உத்தரவு மீறப்படுவதற்கு தீர்வு கண்டு உரிய விலையை வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், பசுந்தேயிலை விலை வீழ்ச்சி அடைந்ததை அடுத்து, மாவட்ட சிறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சட்ட ரீதியில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, இந்திய தேயிலை சட்டப் பிரிவு-30(1,2) அடிப்படையில், பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை வழங்க, கடந்த, 2002ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில், நீலகிரி தேயிலை விவசாயிகள் பாதுகாப்பு மையம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த வழக்கின் தீர்ப்பை, 2007ல் வழங்கியது.

குறைந்தபட்ச விலை வழங்க உத்தரவு


அந்த தீர்ப்பில், 'பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை அளிக்க முடியாது,' என்ற கருத்தை முழுமையாக நிராகரித்து, தேயிலை சட்டம் பிரிவு--30-(1,2) அடிப்படையில் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை அளிக்க உத்தரவிடப்பட்டது.

ஆனால், பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை அளிக்க எந்தவொரு நிச்சயிக்கப்பட்ட வரையறைகளும் இல்லாமல், மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தேயிலை வாரியம் வேறு மாற்றத்தை செய்தது.

'தேயிலை சட்டம் பிரிவு -30-(3,4,5) அடிப்படையில், 'டி.எம்.சி.ஓ' எனப்படும் டீ மார்க்கெட்டிங் கன்ட்ரோலில் உள்ள விலை பகிர்வு நடைமுறையில், சிறுதேயிலை விவசாயிகள் மற்றும் தேயிலை துாள் உற்பத்தியாளர்களுக்கு இடையேயான விற்பனை விலை அடிப்படையில், 60:40 என்ற விலை பகிர்மானம் செய்யும் விகிதாசாரத்தை, 65:35,'என, மாற்றி அமைத்தது.

மீண்டும் கோர்ட்டில் வழக்கு


இந்நிலையில், 'பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வதில் இந்த மாற்றம் தீர்வாகாது,' எனக்கூறி, நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள் தருமன், போஜன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக கடந்த, 2008ல் வழக்கு தொடுத்தனர். அதில், தேயிலை சட்டம் பிரிவு-30(1,2) அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தினர்.

இவ்விரு வழக்குகளுக்கும், 2012ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், 'குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யும் போது, பசுந்தேயிலையின் உற்பத்தி செலவை உள்ளடக்கி இருப்பது கட்டாயம்,' என, உறுதிபடுத்தி, 6-மாத கால கெடுவுடன் உத்தரவு அளிக்கப்பட்டது.

இதன் பிறகு தேயிலை வாரியம், 2013ம், பெங்களூரு ஐ.ஐ.பி.எம்., என்ற நிறுவனத்தை அணுகி நடத்திய ஆய்வில், 'பசுந்தேயிலை உற்பத்தி செலவையும், சேர்த்து கிலோவுக்கு சராசரி, 14.50 ரூபாய் அளிக்கலாம்,' என, உறுதி செய்யப்பட்டது.

இதன் பிறகு, இந்திய தேயிலை வாரியம் சார்பில் தேயிலை துாள் சந்தைபடுத்துதல் கட்டுப்பாட்டு உத்தரவு (டி.எம்.சி.ஓ.,) 30-ஏ என்ற பிரிவை, 2015ம் ஆண்டு அறிவித்து அமல்படுத்தியது. இதற்கான அறிவிப்பை தென்னிந்திய மண்டல அலுவலகம், நீலகிரியில், 2015ம் ஆண்டு நவ., மாதம் அறிவித்தது.

எனினும், 'இந்த அறிவிப்புக்கு பிறகு, பசுந்தேயிலைக்கு மாதாந்திர சராசரி விலை உரிய முறையில் வழங்குவதில்லை,' என்ற குற்றச்சாட்டு உள்ளது.

குறைத்து வெளியான அறிவிப்பு


கடந்த, 2015ல் தேயிலை வாரிய விலை நிர்ணய முதல் அறிவிப்பில், கிலோ, 12.50 ரூபாய் என குறைத்து அறிவிப்பு வெளியானது. இந்த முதல் அறிவிப்பில் இருந்து தற்போது வரையில், 97 சதவீதத்திற்கு மேலான மாதாந்திர விலை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், 'உற்பத்தி செலவையும் உள்ளடக்கிய விலை அறிவிப்பாக இருக்க வேண்டும்,' என்ற ஐகோர்ட் உத்தரவை இதுவரை செயல்படுத்தவில்லை.

'நெலிகோலு' அறக்கட்டளை தலைவர் தருமன் கூறுகையில், ''தேயிலை துாள் சந்தையில் கிலோ, 400 ரூபாய் வரை விற்பனையாகும் நிலையில், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. ஐகோர்ட் உத்தரவுக்கு ஏற்ப தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். வாரியத்தின் செயல்பாடு கோர்ட் உத்தரவை அவமதிப்பாக உள்ளது. 2023ல் இது தொடர்பாக மீண்டும் கோர்ட்டை அணுகியுள்ளோம். இந்த வழக்கு நடந்து வருகிறது. நீலகிரியை சேர்ந்த சுற்றுலா அமைச்சர், தேயிலை வாரிய செயல் அலுவலர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us