/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மக்களை அச்சுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியது
/
மக்களை அச்சுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியது
ADDED : டிச 27, 2025 06:42 AM

பந்தலுார்: கேரள மாநிலம் வயநாடு பகுதியில், மனிதர்களை அச்சுறுத்தி வந்த, 14 வயது ஆண் புலி கூண்டில் சிக்கியது.
வயநாடு புல்பள்ளி அருகே தேவர்கட்டா, என்ற இடத்தில் கடந்த, 20-ம் தேதி விறகு சேகரிக்க சென்ற மாறன் என்பவரை புலி தாக்கி கொன்றது. தொடர்ந்து, 4 இடங்களில் கூண்டு வைத்து, கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். மேலும், 40 இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 2:00 மணிக்கு, வண்டிக்கடவு என்ற இடத்தில் வைத்த கூண்டில், 14 வயது ஆண் புலி சிக்கியது.
பிடிபட்ட புலியை கால்நடை டாக்டர் சியாம் மோகன் தலைமையிலான குழுவினர் பரிசோதனை செய்த பின்னர், குப்பாடி வன விலங்குகள்மீட்பு மைய மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
வனவிலங்கு காப்பாளர் டாக்டர் பிரமோத் ஜி கிருஷ்ணன் கூறுகையில், ''கர்நாகாவில் இருந்து வந்த புலி வளர்ப்பு கால்நடைகள் மற்றும் மனிதர்களை தாக்கியதால் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளது.
இதன் உடல் நிலையை ஆய்வு செய்த பின்னர் வனத்தில் விடுவிப்பதா அல்லது காப்பகத்தில் விடுவிப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்,'' என்றார்.

