/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு ஒதுக்கிய நிதியில் குறை ஏதும் வரக்கூடாது; 30 லட்சம் ரூபாயில் 'கான்கிரீட்' பாலம் அமைக்க போராட்டம்
/
அரசு ஒதுக்கிய நிதியில் குறை ஏதும் வரக்கூடாது; 30 லட்சம் ரூபாயில் 'கான்கிரீட்' பாலம் அமைக்க போராட்டம்
அரசு ஒதுக்கிய நிதியில் குறை ஏதும் வரக்கூடாது; 30 லட்சம் ரூபாயில் 'கான்கிரீட்' பாலம் அமைக்க போராட்டம்
அரசு ஒதுக்கிய நிதியில் குறை ஏதும் வரக்கூடாது; 30 லட்சம் ரூபாயில் 'கான்கிரீட்' பாலம் அமைக்க போராட்டம்
ADDED : ஜூலை 13, 2025 08:25 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே புளியம்பாறை, நாரங்காகடவு ஆற்றை கடக்க அரசு ஒதுக்கிய நிதியில் நிரந்தர பாலம் கட்டித் தர வலியுறுத்தி, நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது.
பந்தலுார் அருகே, புளியம்பாறை, நாரங்காகடவு, கோழிக்கொல்லி, காப்பிமாளம் கிராமங்கள் அமைந்து உள்ளன.
நெல்லியாளம் நகராட்சியின், 14-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இந்த கிராமங்களுக்கு செல்ல, நாரங்காகடவு பகுதி ஆற்றை கடக்க பாலம் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அவசர காலங்களுக்கு வாகனம் செல்ல முடியாத நிலையில், பலரும் உயிரிழந்துள்ளதுடன், மழை காலங்களில் ஆற்றை கடக்க முடியாத சூழலில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை தொடர்கிறது. இந்நிலையில், இப்பகுதியில் 'கான்கிரீட்' பாலம் அமைக்க, மாநில அரசு சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 30 லட்சம் ரூபாய் நிதியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒதுக்கியது. ஆனால், இப்பகுதி வனத்துறைக்கு உட்பட்ட பகுதி என்று கூறி, பாலம் கட்டுவதற்கு வனத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், 'கான்கிரீட்' பாலத்திற்கு பதில், 18 லட்சம் ரூபாய் செலவில் இரும்பினாலான பாலம் அமைக்கும் பணி நேற்று முன்தினம் காலை துவங்கியது.
இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, 'மாநில அரசு ஒதுக்கிய நிதி மூலம் நிரந்தர சிமென்ட் பாலம் அமைக்க வேண்டும். அரசு ஒதுக்கிய, 30 லட்சம் ரூபாய்க்கு பதில், 18 லட்சம் ரூபாய் செலவில் பாலம் அமைப்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்,' என கூறி, மா.கம்யூ., நிர்வாகி ரவிக்குமார் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பாக, கட்சி நிர்வாகிகள் வாயில் கருப்பு துணி கட்டி இரவு வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை அடுத்து நடந்த பேச்சுவார்த்தையில், 'மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரையின் பேரில், தற்போது பாலம் கட்டும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், வன அலுவலர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்திய பின்னர் பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படும்,' என, ஆர்.டி.ஓ., எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தார். அதனையடுத்து இரவு, 10:-30 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், பாலம் கட்டும் பணி விரைவில் துவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

