/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆயுத பூஜை தினத்தில் வழக்கத்தை விட குப்பை அதிகம்
/
ஆயுத பூஜை தினத்தில் வழக்கத்தை விட குப்பை அதிகம்
ADDED : அக் 14, 2024 09:07 PM
ஊட்டி : ஊட்டி நகராட்சி வார்டுகளில் ஆயுத பூஜையை ஒட்டி வழக்கத்தை விட, 15 டன் அளவுக்கு அதிகமாக குப்பை கழிவுகள் சேர்ந்துள்ளது.
ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. 1.30 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். ஆயுத பூஜையை ஒட்டி வீடு, கடை, வணிக நிறுவனம் மற்றும் நகரில் ஆங்காங்கே தனியார் வாகன ஓட்டிகள் , ஆட்டோக்களுக்கு ஆயுத பூஜை நடந்தது. ஆயுத பூஜைக்காக பூ மாலை, தோரணங்கள், வாழை இலை பயன்படுத்தப்பட்டது.
11, 12 ம் தேதிகளில் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பூஜை முடிந்ததை அடுத்து பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் வீட்டு உரிமையாளர்கள் சேகரித்து வைத்து, குப்பைகளை சேகரிக்க வரும் துப்பரவு பணியாளர்களிடம் கொடுத்தனர். கடை, வணிக நிறுவனங்களில் வெளியேற்றப்பட்ட குப்பைகள் நகரில் ஆங்காங்கே வீசி எறியப்பட்டுள்ளது.
நேற்று, வார்டுகளில் வழக்கத்தை விட குப்பைகள் அதிகரித்ததால், நண்பகல், 12:00 மணி வரை குப்பை சேகரிக்கும் பணி தொடர்ந்தது. ஆயுத பூஜையை ஒட்டி குப்பை கழிவுகள், 15 டன் அளவுக்கு கூடுதலாக சேர்ந்ததால் கடும் சிரமத்திற்கு இடையே துப்புரவு பணியாளர்கள் அகற்றினர்.
அதிகாரிகள் கூறுகையில்,' நகராட்சி வார்டுகளில் தினமும் சராசரியாக, 25 டன் அளவுக்கு மட்கும் குப்பை, மட்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு, தீட்டுக்கல் குப்பை கிடங்குக்கு அனுப்பப்படுகிறது. ஆயுத பூஜை விழாவை தொடர்ந்து, கூடுதலாக 15 டன் வரை குப்பை கழிவுகள் சேகரிப்பட்டுள்ளன,' என்றனர்.

