/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீர் திட்டத்தில் சேதமான பகுதியின் பணி ஓரிரு நாளில் முடியும்! 'கிரேன்' உதவியுடன் முழு வீச்சில் சீரமைக்க திட்டம்
/
குடிநீர் திட்டத்தில் சேதமான பகுதியின் பணி ஓரிரு நாளில் முடியும்! 'கிரேன்' உதவியுடன் முழு வீச்சில் சீரமைக்க திட்டம்
குடிநீர் திட்டத்தில் சேதமான பகுதியின் பணி ஓரிரு நாளில் முடியும்! 'கிரேன்' உதவியுடன் முழு வீச்சில் சீரமைக்க திட்டம்
குடிநீர் திட்டத்தில் சேதமான பகுதியின் பணி ஓரிரு நாளில் முடியும்! 'கிரேன்' உதவியுடன் முழு வீச்சில் சீரமைக்க திட்டம்
ADDED : டிச 10, 2024 11:26 PM
ஊட்டி; 'எமரால்டில் இடிந்து விழுந்த கூட்டு குடிநீர் திட்ட குழாய்களின் சீரமைப்பு பணிகள் ஓரிரு நாளில் நிறைவு பெறும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி அருகே, எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து, 'முள்ளிகூர், நஞ்சநாடு, இத்தலார் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்கள்; குன்னுார் நகராட்சி; பாஸ்டியர் இன்ஸ்டிடியூட்; ராணுவ முகாம்,' உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இத்திட்டத்திற்காக ஆங்காங்கே ராட்சத தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, எமரால்டு பிரதான இடத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியிலிருந்து ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
இரும்பு தடுப்பு அமைப்பு
இந்நிலையில், எமரால்டு அருகே காட்டு குப்பையில், '500 மெகாவாட்' திறன் கொண்ட குந்தா நீரேற்று மின் திட்ட பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இப்பணிக்காக அணையில் இருப்பில் உள்ள தண்ணீர், 70 அடி வரை வெளியேற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, எமரால்டு அணையிலிருந்து, கடந்த, 10ம் தேதி முதல் வினாடிக்கு,1000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதுவரை, 60 அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டது. எமரால்டு அணையில் திறக்கப்படும் தண்ணீர் நீரோடை வழியாக குந்தா அணைக்கு செல்கிறது.
தண்ணீர் குழாய் சேதம்
கடந்த ஒரு மாதமாக வினாடிக்கு , 1000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், நீரோடை வழித்தடத்தில் வருவாய் மற்றும் மின்வாரியத்திற்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து பயிரிடப்பட்ட மலை காய்கறிகள் மற்றும் வீடுகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக , குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குன்னுாருக்கு கொண்டு செல்லும் ராட்சத குழாய் பொருத்திய பிரதான கூட்டு குடிநீர் திட்டத்தின் தடுப்பு பாலம் உடைந்தது. மேலும், தண்ணீர் குழாய் சேதமானதால் தண்ணீர் வினியோகம் தடைப்பட்டது. தொடர்ந்து, குடிநீர் வடிகால் வாரிய சார்பில் சேதமான பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செல்வகுமார் தலைமையில், உதவி நிர்வாக பொறியாளர்கள் சங்கீதா, சித்ரா முன்னிலையில் பணியாளர்கள்,சேதமான குறிப்பிட்ட பகுதியில், 'ராட்சத கிரேன்' உதவியுடன் இரும்பு தடுப்பு அமைத்து வருகின்றனர். சீரமைப்பு பணியை ஒட்டி, எமரால்டு அணை தண்ணீர் ஒரு நாள் நிறுத்தப்பட்டது.

