/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மண்ணை மலடாக மாற்றும் குப்பை கழிவுகள் போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு
/
மண்ணை மலடாக மாற்றும் குப்பை கழிவுகள் போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு
மண்ணை மலடாக மாற்றும் குப்பை கழிவுகள் போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு
மண்ணை மலடாக மாற்றும் குப்பை கழிவுகள் போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு
ADDED : மார் 05, 2024 09:06 PM

பந்தலுார்:சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட வனப்பகுதியில் குப்பைகளை கொடுத்துவதால், மண் பாதிக்கப்பட்டு, சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.
பந்தலுார் அருகே, சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக கொட்டி தரம் பிரித்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த முன் வரவில்லை.
இப்பகுதியில், 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட கடைவீதிகளில் சேகரிக்கப்படும், 'பிளாஸ்டிக்' மற்றும் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட அனைத்து குப்பை கழிவுகளும், கொண்டுவரப்பட்டு மக்கள் குடியிருப்பு பகுதிகள் நிறைந்த, குழிவயல் வனப்பகுதியில் மலைபோல் குவிக்கப்படுகிறது.
வருவாய் துறைக்கு சொந்தமான நிலமாக இருந்த போதும், இதன் மையப்பகுதியில் குடியிருப்புகளும், அதனை சுற்றிலும் மூங்கில் புதர்கள் நிறைந்த வனம் மற்றும் நீரோடையும் அமைந்து உள்ளது.
இந்த பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றிகள் மற்றும் ஊர்வன, பறவை இனங்கள் அதிக அளவில் வாழ்விடமாக உள்ளது.
தற்போது குப்பைகளை கொட்டி வருவதால், கழிவுகள் வனப்பகுதி முழுவதும் சிதறி காணப்படுகிறது.
மேலும், இதே பகுதியில் குழி தோண்டி 'பிளாஸ்டிக்' உள்ளிட்ட கழிவுகள் புதைக்கப்படுவதாலும், குப்பை கழிவுகளை மூடும் வகையில் மண்ணை கொட்டி மறைத்து வைப்பதாலும், மண்ணின் இயற்கை தன்மை மாறி, குடிநீரும் பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.
கிராமத்தை சேர்ந்த அம்சா கூறுகையில்: ''வனப்பகுதியில் குப்பைகளை தொடர்ச்சியாக கொட்டி மூடி வைப்பதாலும், குழி தோண்டி புதைப்பதாலும் மண் மலடாக மாறி வருவதுடன், கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீரும் பாதிக்கப்பட்டு உள்ளது. வன விலங்குகளை பாதுகாக்க வேண்டிய அரசு துறை அதிகாரிகள், வனவிலங்குகள் பாதிக்கும் செயலை செய்து வருவது சரியானது இல்லை,'' என்றார்.
அப்துல் ரப்பீக் கூறுகையில்: ''பொதுமக்களுக்கும் வன விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், பொது இடங்களில் குப்பைகள் கொட்ட கூடாது என ஊராட்சி நிர்வாகம் கூறி சுகாதாரத்தை பாதுகாப்பதாக தெரிவிக்கிறது. ஆனால், மக்கள் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கும் வகையில் வனப்பகுதியில் குப்பைகளை கொட்டி, பாதிப்புகளை ஏற்படுத்தி வருவது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும், போராட்டங்கள் நடத்தியும் யாரும் கண்டுகொள்ள முன் வருவதில்லை.
எனவே, தொடரும் இந்த செயலை கண்டித்து வரும், 13-ஆம் தேதி இப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.

