/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எதிர் தீ வைத்து தீ தடுப்பு கோடு அமைக்கும் வனத்துறையினர்
/
எதிர் தீ வைத்து தீ தடுப்பு கோடு அமைக்கும் வனத்துறையினர்
எதிர் தீ வைத்து தீ தடுப்பு கோடு அமைக்கும் வனத்துறையினர்
எதிர் தீ வைத்து தீ தடுப்பு கோடு அமைக்கும் வனத்துறையினர்
ADDED : பிப் 23, 2024 11:36 PM

பந்தலுார்:பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில் எதிர் தீ வைத்து, தீ தடுப்பு கோடு அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பந்தலுார் அருகே, பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, பகுதிகளில் கோடை காலத்தில் வனங்களில் தீ ஏற்படுவதை தடுக்கும் வகையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில், ஏலமன்னா வனக்காவல் பகுதிக்கு உட்பட்ட, மழவன்சேரம்பாடி சுற்றுப்புற வனப்பகுதிகளில், வனச்சரகர் ரவி தலைமையில், வனவர் பெலிக்ஸ், வனக்காப்பாளர் கோபு தலைமையிலான வனக்குழுவினர் மூலம் எதிர் தீ வைக்கப்பட்டு, தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வனத்துறையினர் கூறுகையில், 'இதன் மூலம் கோடையில் பரவும் வனத்தீயை கட்டுப்படுத்த முடியும்; வனத்தீயை கட்டுப்படுத்துவதில் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,' என்றனர்.