/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா பயணி தவற விட்ட தங்க செயினை ஒப்படைத்த ஊழியர்; சான்றிதழ் அளித்து கவுரவித்த வனத்துறை

ADDED : அக் 11, 2024 10:03 PM

கூடலுார் : கூடலுார் ஜீன்பூல் தாவர மையத்தில், சுற்றுலா பயணி தவறவிட்ட இரண்டரை பவுன் தங்க நகையை, ஒப்படைத்த ஊழியரை வனத்துறையினர் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கினர்.
கூடலுார், நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் தங்கி செல்வதற்கான அறைகளும் உள்ளன. இங்கு, பெரும்பாலான பணிகளில், பழங்குடியினர் இளைஞர்கள் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு பணிபுரிந்து வரும், புளியாம்பறை கோழிக்கொல்லி பழங்குடி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ், என்பவருக்கு, சமீபத்தில் இரண்டரை பவுன் தங்க செயின் கீழே கிடைத்துள்ளது. அதனை வனச்சரகர் வீரமணியிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து நடந்த விசாரணைக்கு பின் தங்க நகை தவறவிட்ட சுற்றுலா பயணியை கண்டு பிடித்து ஒப்படைத்தனர். ஊழியரின் நேர்மையை அனைவரும் பாராட்டினர்.
ஜீன்பூல் தாவர மையத்தில், நடந்த தைலம் உற்பத்தி மைய திறப்பு விழாவில், இளைஞர் பிரகாசுக்கு, வனத்துறை சார்பில் சான்றிதழ் மற்றும் 2,500 ரூபாய் பரிசு தொகையை, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா. வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு ஆகியோர் வழங்கி கவுரப்படுத்தினர்.