/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
டீசலுக்கு மாறிய 'பெட்டா குயின் இன்ஜின்' இயக்கம்
/
டீசலுக்கு மாறிய 'பெட்டா குயின் இன்ஜின்' இயக்கம்
ADDED : ஜன 14, 2025 01:32 AM

குன்னுார்:
'பர்னஸ்' ஆயிலில் இருந்து, டீசலுக்கு மாற்றிய, கடைசி நீராவி இன்ஜின் மூலம், நீலகிரி மலை ரயில் இயக்கம் துவங்கியது.
நீலகிரி மலை ரயிலில் 'எக்ஸ் கிளாஸ்' நீராவி இன்ஜின்கள் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டது. அடிக்கடி பழுது ஏற்பட்டதால், கடந்த, 2002-ல் இருந்து 'பர்னஸ் ஆயிலில் ' இயங்கும் நீராவி இன்ஜின்கள் பயன்பாட்டில் இருந்தது. பர்னஸ் ஆயில் பயன்படுத்த, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்ததால், குன்னுார் பணிமனை, திருச்சி பொன்மலை பணிமனைகளில் தலா, 3 இன்ஜின்கள் டீசலுக்கு மாற்றப்பட்டன. அதில் இறுதியாக மாற்றப்பட்ட 'பெட்டா குயின்' இன்ஜின், சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது.
இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில், இந்த 'பெட்டா குயின்' நீராவி இன்ஜினால் இயக்கப்பட்டது.
ஹைட்ரஜன் ரயில் திட்டம்
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'பர்னஸ் ஆயிலில் எரியூட்டப்பட்டு, நீராவியால் இன்ஜின் இயங்கியதை போன்று, டீசலுக்கு மாற்றப்பட்டு நீராவியால், 'எக்ஸ் கிளாஸ்' இன்ஜின்கள் இயங்கி வருகின்றன.
நாட்டில் முதல் ஹைட்ரஜன் ரயில் ஹரியானாவில் அறிமுகப்படுத்த உள்ள நிலையில், 35 ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில், டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில், சிம்லா ரயில், நீலகிரி மலை ரயில்களை ஹைட்ரஜன் எரிபொருளை கொண்டு இயக்குவதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது,' என்றனர்.

