/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு வேண்டும்
/
மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு வேண்டும்
ADDED : அக் 02, 2024 11:58 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சி கிராம சபை கூட்டம் கூலால் அரசு துவக்கப்பள்ளியில் நடந்தது.
ஊராட்சி செயலாளர் சஜித் வரவேற்றார். தலைவர் லில்லி தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் விவாதங்கள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து, வரவு செலவு கணக்கு வாசித்து அங்கீகரிக்கப்பட்டதுடன், மக்களுக்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் அங்கீகரிக்கப்பட்டன.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில், 'காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்; மக்களுக்கு தேவையான தெரு விளக்கு, குடிநீர், நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்; என, வலியுறுத்தப்பட்டது.

