/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காரக்கொரை வீட்டில் திடீர் தீ; சிலிண்டர் பாதுகாப்பாக மீட்பு
/
காரக்கொரை வீட்டில் திடீர் தீ; சிலிண்டர் பாதுகாப்பாக மீட்பு
காரக்கொரை வீட்டில் திடீர் தீ; சிலிண்டர் பாதுகாப்பாக மீட்பு
காரக்கொரை வீட்டில் திடீர் தீ; சிலிண்டர் பாதுகாப்பாக மீட்பு
ADDED : நவ 12, 2024 09:59 PM

குன்னுார் ; குன்னுார், காரக்கொரை பகுதியில் வீட்டில் ஏற்பட்ட தீயை, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தீயணைப்பு துறையினர் அணைத்து, சிலிண்டரை பாதுகாப்பாக மீட்டனர்.
குன்னுார் அருகே ஜெகதளா காரக்கொரை பகுதியை சேர்ந்தவர் பரமன். இவரது வீட்டில் நேற்று காலை, 9:00 மணியளவில் தீப்பிடித்ததாக வந்த தகவலின் பேரில், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தீயணைப்பு துறையினர் சென்று தீயை அணைத்து, பாதுகாப்பாக காஸ் சிலிண்டரை வெளியே எடுத்து வந்தனர். தொடர்ந்து, குன்னுார் தீயணைப்பு துறையினர், அருவங்காடு போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், வீட்டிற்கான சமையல் காஸ் பயன்படுத்தி, கடைக்கான பலகாரங்கள் தயார் செய்த போது எண்ணெயில் தீப்பிடித்துள்ளதாக தெரிய வந்தது.
அருவங்காடு போலீசார் சார்பில் கொடுத்த தகவலின் பேரில், காஸ் நிறுவனம் விசாரணை நடத்த உள்ளது.