/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஸ்ரீ விஷ்ணு, துர்க்கை அம்மன் திருவிழா பாலகொலா கிராமத்தில் கோலாகலம்
/
ஸ்ரீ விஷ்ணு, துர்க்கை அம்மன் திருவிழா பாலகொலா கிராமத்தில் கோலாகலம்
ஸ்ரீ விஷ்ணு, துர்க்கை அம்மன் திருவிழா பாலகொலா கிராமத்தில் கோலாகலம்
ஸ்ரீ விஷ்ணு, துர்க்கை அம்மன் திருவிழா பாலகொலா கிராமத்தில் கோலாகலம்
ADDED : ஏப் 08, 2025 09:52 PM

ஊட்டி, ; பாலகொலா கிராமத்தில் ஸ்ரீ விஷ்ணு, துர்க்கை அம்மன் கோவில் திருவிழா விமரிசையாக நடந்தது.
ஊட்டி அருகே, பாலகொலா கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இக்கோவிலில் மாரியம்மன் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு திருவிழாவை ஒட்டி நேற்று முன்தினம், காலை, 8:30 மணி முதல் 9:30 மணி வரை கோவிலில் பாலாபிஷேகம் நடந்தது. காலை, 10:00 மணி முதல் 12:00 மணி வரை விநாயகர் பூஜை, பஜனை நிகழ்ச்சி நடந்தது. மாலை, 3:30 மணி முதல் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று, 8ம் தேதி காலை, 8:30 மணி முதல் அம்மன் ஊர்வலம், பக்தர்களின் ஆடல், பாடலுடன் விமரிசையாக நடந்தது.காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் கிராம மக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசித்தனர். அன்னதான நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாலையில் பாரம்பரிய உடை அணிந்து நடந்த நடன நிகழ்ச்சியில் கிராம மக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.