/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கணிதம் கையாள தனி நுட்பம்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
கணிதம் கையாள தனி நுட்பம்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு
கணிதம் கையாள தனி நுட்பம்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு
கணிதம் கையாள தனி நுட்பம்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : பிப் 02, 2024 08:58 PM
குன்னுார்:குன்னுாரில் உள்ள, 'மனிதனை நேசிப்போம்' அறக்கட்டளை சார்பில், மஞ்சூர் சாம்ராஜ் உயர்நிலை பள்ளியில் மாணவர்களின் நல்வாழ்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், குன்னுார் விஷன் மேக்ஸ் அமைப்பின் சார்பில், 6 ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 'விஷன் மேக்ஸ்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அமைப்பு நிறுவன இயக்குனர் ரஹீப் வாஜித் தலைமை வகித்து, 'கணிதத்தை கையாள்வதற்கான தனித்துவமான நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து, நடந்த போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மனிதனை நேசிப்போம் அறக்கட்டளை நிர்வாகி பாருக் அகமத், 'போதை பொருட்களில் இருந்து மாணவர்கள் விலகி வாழ்வில் நல்ல நிலைக்கு உயர வேண்டும்,' என்றார். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சார்லஸ் மற்றும் ஆசிரியர்கள் செய்தனர்.