/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ.1 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணி
/
ரூ.1 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணி
ADDED : டிச 20, 2024 10:30 PM

கோத்தகிரி; கோத்தகிரி கட்டப்பட்டு டி. மணியட்டி இடையே, ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாலை மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.
கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில் இருந்து, கக்குச்சி மற்றும் தும்மனட்டி சாலையில், அரசு பஸ்கள், பள்ளி வாகனங்கள் உட்பட, தனியார் வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. இச்சாலை, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. முழுமை பெறாமல் இருந்தது.
குறிப்பாக, கட்டபெட்டு -டி. மணியட்டி இடையே, சாலை விரிவு படுத்தாததால், குழிகள் ஏற்பட்டு, வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது. மக்கள் சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, கட்டபெட்டு -- குடிமனை இடையே, 600 மீட்டர்; ஒன்னதலை பிரிவில் இருந்து, டி. மணியட்டி வரை,1,200 மீட்டர் தொலைவு வரை சீரமைக்க, சாலை ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
அதன்படி, இந்த நிதியில் தேவையான இடங்களில் தடுப்பு சுவர், மழைநீர் வழிந்து ஓட சாலையோர கான்கிரீட் அமைத்து தார் போடும் பணி நடந்து வருகிறது. கட்டபெட்டு- தொட்டபெட்டா இடையே, இயற்கை சீற்றத்தின் போது, சாலை துண்டிக்கப்படும் பட்சத்தில், கட்டபெட்டு , அஜ்ஜூர், கொந்தொரை வழியாக, தொட்டாபெட்டா சந்திப்பை அடைய மாற்றுபாதையாக இச்சாலை அமையும்.
மக்கள் கூறுகையில், ' சாலையை தரமாக சீரமைத்தால், எதிர்காலத்தில் வாகன போக்குவரத்து இச்சாலையில் அதிகரிக்கும். சாலை ஓர இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டியுள்ளனர். இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக, பங்களோரை பகுதியில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறையினர், நில அளவை செய்து, பாரபட்சம் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவு படுத்த வேண்டும்' என்றனர்.

