/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விஷ்ணு கோவிலில் ஸ்ரீமத் பாகவத சப்தாகம்; ஸ்ரீ கிருஷ்ணரின் வரலாறு குறித்த பாராயணம்

ADDED : மே 01, 2025 04:45 AM

பந்தலுார் : பந்தலுார் அருகே, பொன்னானி பகுதியில் ஸ்ரீ மகா விஷ்ணு கோவில் அமைந்துள்ளது.
நுாற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலில், ஸ்ரீமத் பாகவத சப்தாகம் ஆன்மிக சொற்பொழிவு நேற்று துவக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கேரளா மாநிலத்தை சேர்ந்த ஆச்சாரியா பாகவத சூரியன் ஸ்ரீ வியாசன் அமனகரா தலைமையில் வரும், 6-ம் தேதி வரை ஏழு நாட்கள் பாகவதம் மூலமாக, பாராயணம் செய்கிறார்.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ வியாசன் கூறுகையில், '' ஏழு நாட்கள் நடக்கும் இந்த சிறப்பு பூஜையில், பங்கேற்று பாராயணம் செய்தால் குடும்பம், கிராமம் ஆன்மிக வளர்ச்சி பெற்று, உடல் ஆரோக்கியம், மன அமைதி, கல்வி, வேலைவாய்ப்பு, சுப காரியங்கள், விவசாயம் செழிப்பு பெறுதல் போன்ற நன்மைகள் கிடைக்கும்,''என்றார்.
இதற்கான சிறப்பு பூஜைகளை சுவாமி வியாசன் தலைமையில், மேல் சாந்தி வைசாக் சர்மா, சசிதரன் நாயர், பிஜூ பணிக்கர்,பாபு ஆகியோர் செய்தனர்.
ஏற்பாடுகளை கமிட்டி தர்மகர்த்தாக்கள் பிரபாகரன், பீதாம்பரன், சஜி, தலைவர் புஷ்பாகரன், பொதுச் செயலாளர் உன்னிகிருஷ்ணன், பொருளாளர் சந்தியா,மேல்சாந்தி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர்.