/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாகனம் மோதி பலியான 'ஆசியன் மரநாய்' அதிவேகத்தால் அரிய விலங்கினங்களுக்கு ஆபத்து

ADDED : மார் 11, 2024 01:21 AM

கோத்தகிரி;கோத்தகிரி அருகே, இரவில் மட்டும் இரைதேடும் அரிய வகை விலங்கான 'ஆசியன் மரநாய்' வாகனம் மோதி பலியானது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி கொணவக்கரை கிராமத்தை ஒட்டிய உள்ள, கண்ணவரை சோலை, வனவிலங்குகளின் வாழிடமாக உள்ளது.
இங்குள்ள சாலையை, கரடி, புலி, காட்டெருமை மற்றும் முள்ளம்பன்றி போன்ற பல வன விலங்குகள், உணவுக்காக கடந்து செல்வது வழக்கம்.
இங்கு இரவில் வனவிலங்குகள் வாகனங்களில் அடிப்பட்டு இறப்பது, சமீபக்காலமாக வாடிக்கையாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில், மூன்று விலங்குகள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளன. இந்நிலையில், நேற்று அதிகாலை அழிவின் விளிம்பில் உள்ள 'பிரவுன் பாம் சிவெட்' என்று அழைக்கப்படும் 'ஆசியன் மரநாய்' வாகனத்தில் அடிபட்டு சாலையில் இறந்து கிடந்தது.
தகவலின் பேரில், கோத்தகிரி ரேஞ்சர் ஆலோசனை படி, வனவர் விவேகானந்தன் உட்பட, வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, இறந்த மர நாயை மீட்டு, வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
வனவர் விவேகானந்தன் கூறுகையில், ''மூன்று முதல் நான்கு வயதான ஆசியன் மரநாய் சாலையில் வாகனம் மோதி இறந்து கிடந்தது.
அரிய வகை விலங்கான இதனை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் குறித்தும், விலங்குகளின் வழித்தட தடை குறித்தும் ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.,