sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பசுமையை பாதுகாத்து நிலச்சரிவை தடுக்கும்... 'சாயில் நெய்லி' தொழில்நுட்பம்! ஐந்து இடங்களில் அமைக்க நெடுஞ்சாலை திட்டம்

/

பசுமையை பாதுகாத்து நிலச்சரிவை தடுக்கும்... 'சாயில் நெய்லி' தொழில்நுட்பம்! ஐந்து இடங்களில் அமைக்க நெடுஞ்சாலை திட்டம்

பசுமையை பாதுகாத்து நிலச்சரிவை தடுக்கும்... 'சாயில் நெய்லி' தொழில்நுட்பம்! ஐந்து இடங்களில் அமைக்க நெடுஞ்சாலை திட்டம்

பசுமையை பாதுகாத்து நிலச்சரிவை தடுக்கும்... 'சாயில் நெய்லி' தொழில்நுட்பம்! ஐந்து இடங்களில் அமைக்க நெடுஞ்சாலை திட்டம்


ADDED : மே 19, 2024 11:24 PM

Google News

ADDED : மே 19, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;நீலகிரியில் நிலச்சரிவு அபாயம் பகுதிகளில், 'சாயில் நெய்லி' முறையில் பசுமையை பேணி பாதுகாக்கும் தொழில் நுட்பத்தை நெடுஞ்சாலை துறையினர் செயல்படுத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா, பந்தலுார், கூடலுார் பகுதிகளில், 280 பேரிடர் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. பருவ மழை காலங்களில், மண் சரிவு, நிலச்சரிவால் பேரிடர் பாதிப்புகள் அதிகரிக்கிறது.

இதனை தடுக்கும் வகையில், மழை காலங்களில் தண்ணீர் தடையின்றி வெளியேற நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாவட்டத்தில் தேவைப்படும் இடங்களில் சிறு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பின்றி காணப்பட்ட சிறு பாலங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

'ைஹட்ரோ சீடிங்' முறை


இதை தவிர, மாவட்டத்தில் நிலச்சரிவை தடுக்க நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையோரம், 'சாயில் நெய்லி' பொருத்தி, 'ைஹட்ரோ சீடிங்' முறையில் பசுமையை பேணி பாதுகாக்கும் தொழில் நுட்பம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு பரிசோதனை முயற்சியாக, ஊட்டி - கோத்தகிரி சாலையில் கோடப்பமந்து மற்றும் பாக்கியநகர் ஆகிய இரு இடங்களில் இப்பணியானது செயல்படுத்தப்பட்டது.

அதில், மண்ணரிப்பை தடுக்கும் விதமாக புற்கள் வளர்ந்துள்ளன. இந்த தொழில் நுட்பம் திருப்திகரமாக இருந்ததால், மாவட்டத்தில் நிலச்சரிவு உள்ள பகுதிகளில் செயல்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் பரிந்துரைத்துள்ளனர்.

ஐந்து இடங்களில் பணி


அதன்படி, மாநில நெடுஞ்சாலைத்துறை திட்ட அறிக்கை தயாரித்தது. முதற்கட்டமாக, 'கோத்தகிரி - குன்னுார் சாலை கட்டபெட்டு நடுஹட்டி பவர்ஹவுஸ் பகுதி; குன்னுார் - கேத்தி பாலாடா, சேலாஸ் சாலையில் உல்லாடா பகுதி; ஊட்டி - கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் சாலையில் கோடப்பமந்து மற்றும் மடித்தொரை; ஊட்டி - அவலாஞ்சி சாலையில் இத்தலார்,' என, 5 இடங்களில் ,'ைஹட்ரோ சீடிங்' பசுமை பணியானது நடந்து வருகிறது.

இந்நிலையில், ஊட்டி - கோத்தகிரி சாலையில் மடித்தொரையில் நடந்து வரும் பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர் ஆய்வு செய்தார். கோவை நெடுஞ்சாலைத்துறை வட்ட கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், ஊட்டி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.

'சாயில் நெய்லி' என்றால் என்ன...?

கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் கூறுகையில்,''மலை பகுதியின் மேல் பரப்பின் சாய்வு தளத்தை வலுப்படுத்தும் 'மண்ஆணி' அமைத்தல்; மண்ணரிப்பை தடுக்க 'ைஹட்ரோ சீடிங்' முறையில் புற்களை விதைத்து, மண் வலிமையை உறுதி செய்யதல்; மண் சரிவை தடுக்க, 'ஜியோ கிரீட்' மூலம் மண்ணின் ஸ்திரதன்மையை வலிமைபடுத்துதல். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் வளர்க்கப்படும் புற்கள் மலை பகுதியில் மண்ணரிப்பை தடுக்கும். இதனால், நிலச்சரிவு ஏற்படாது,'' என்றார்.








      Dinamalar
      Follow us