/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு
/
அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு
ADDED : ஜன 09, 2025 10:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; நீலகிரியில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் நேற்று முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
நீலகிரியில், 413 ரேஷன் கடைகளில், 2.18 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் தொகுப்பு பெற உள்ளனர். அதில், ஒரு கிலோ பச்சரிசி; ஒரு கிலோ சர்க்கரை; ஒரு முழு கரும்பு வழங்கப்படுகிறது. பொங்கல் தொகுப்புக்காக ஏற்கனவே குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
ஊட்டி அருகே இந்து நகர் ரேஷன் கடையில் கலெக்டர் லட்சுமி பவ்யா, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலைகளை வழங்கினார். அதேபோல், மாவட்ட முழுவதும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

