/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுத்திகரிப்பு நிலையத்தில் 'பிளாஸ்டிக்' கழிவு
/
சுத்திகரிப்பு நிலையத்தில் 'பிளாஸ்டிக்' கழிவு
ADDED : பிப் 06, 2024 10:01 PM
ஊட்டி:சுத்திகரிப்பு நிலையத்தில் தேங்கியுள்ள 'பிளாஸ்டிக்' கழிவுகளால் படகு இல்லம் ஏரியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி நகராட்சியில் உள்ள, 36 வார்டுகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சுகாதார பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். அதில், மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது.
மக்காத குப்பை மறு சுழற்சிக்கு அனுப்பபடுகிறது. நகரில் உள்ள சில வணிக நிறுவனம், குடியிருப்பு வாசிகள் குப்பை, பிளாஸ்டிக் பாட்டில்களை கோடப்பமந்து கால்வாயில் வீசி எறிகின்றனர்.
பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் படகு இல்லம் அருகே உள்ள, சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள கால்வாயில் தேங்கியுள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகள் நேரடியாக ஏரிக்கு செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
எனவே, சுத்திகரிப்பு நிலையத்தில் தேங்கியுள்ள கழிவுகளை பொதுபணி, நகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு அகற்ற வேண்டும்.

