/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பிளாஸ்டிக் மனித குலத்திற்கு பாதிப்பாக மாறியுள்ளது' வளங்குன்றா வளர்ச்சி கருத்தரங்கில் கவலை
/
'பிளாஸ்டிக் மனித குலத்திற்கு பாதிப்பாக மாறியுள்ளது' வளங்குன்றா வளர்ச்சி கருத்தரங்கில் கவலை
'பிளாஸ்டிக் மனித குலத்திற்கு பாதிப்பாக மாறியுள்ளது' வளங்குன்றா வளர்ச்சி கருத்தரங்கில் கவலை
'பிளாஸ்டிக் மனித குலத்திற்கு பாதிப்பாக மாறியுள்ளது' வளங்குன்றா வளர்ச்சி கருத்தரங்கில் கவலை
ADDED : பிப் 20, 2024 10:36 PM
கோத்தகிரி;கோத்தகிரியில் 'வளங்குன்றா வளர்ச்சி குறிக்ேகாள் ' என்ற தலைப்பில், கருத்தரங்கு நடந்தது.
ஐக்கிய நாடுகள் சபை, உலக நாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிக்கான 'வளங்குன்றா வளர்ச்சி குறிக்கோள்கள்' என்ற தலைப்பில், 17 வகையான நெறிமுறைகளை வகுத்துள்ளது.
'பூமியின் தாக்குப்பிடிக்கும் திறனுக்கேற்ப வளர்ச்சி அமைய வேண்டும்,' என, உலக நாடுகளை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, கோத்தகிரியில் தனியார் பயிற்சி மையத்தில் கருத்தரங்கு நடந்தது. தொழிலதிபர் ராஜேஷ் போஜராஜன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஆசிரியர் ராஜூ சிறப்பு கருத்தாளராக கலந்துக்கொண்டு பேசியதாவது:
200 ஆண்டுகளுக்கு முன்பு, சாதாரண காய்ச்சல் போன்ற சிறிய நோய்களுக்கு சிகிச்சை பெற மருத்துவ மனைக்கு செல்லும் நோயாளிகளில், பெரும்பாலோர் உயிரிழந்தனர்.
அக்கால மக்கள் சாக்கடையில் துர்தேவதைகள் வந்து மக்களை கொல்வதாக நம்பினர். விஞ்ஞானி ஒருவர், பினாயில் என்ற வேதிப்பொருளை கண்டுபிடித்து, அதனை நோயாளியின் உடலில் பூசிய போது மரணம் ஏற்படுவதில்லை என கண்டறிந்தார்.
பிறகு, அதிலிருந்து பினாயில், வெடிமருந்து, வெண்ணிலா ஐஸ்கிரீம் மற்றும் பிளாஸ்டிக் உட்பட, 10 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது, பிளாஸ்டிக்கை ஒரு வரமாக நம்பினர். ஆனால், தற்போது பூமியில் நிலம், நீர், காற்று ஆகிய மூன்று மண்டலங்களுடன், பிளாஸ்டிக் மண்டலமும் நான்காவதாக உருவாகியுள்ளது. பூமியின், 10 சதவீதத்திற்கு மேற்பட்ட பரப்பு பிளாஸ்டிக் குப்பைகளால் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில், 400 கோடி மெட்ரிக் டன் அளவில் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது.
அவற்றில், பாதியளவு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு, குப்பைகளாக மாறுகின்றன. ஏழு சதவீதம் மட்டுமே, மறுசுழற்சி செய்யப்படுகிறது. எரிக்கப்படும் பிளாஸ்டிக்குளால் ஏராளமான பசுமைக்குடில் வாயுக்கள் உருவாகி, புவியை வெப்பப்படுத்துகிறது. பிளாஸ்டிக் இன்று மனித குலத்திற்கு பாதிப்பாக மாறியுள்ளது. இவ்வாறு, ஆசிரியர் ராஜூ பேசினார்.
இதில், யுனஸ்கோ அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர் ரகுவரன், ஜே.சி.ஐ., சங்க தலைவர் திருமூர்த்தி மற்றும் செயலாளர் அருண் பெள்ளி உட்பட, மாணவர்கள் பங்கேற்றனர்.
மையத்தின் தாளாளர் கோபால் வரவேற்றார். கல்வி மேலாண்மை நிர்வாகி சுஜினா நன்றி கூறினார்.

