/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானை வழித்தடத்தில் குவிந்துள்ள பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள்
/
யானை வழித்தடத்தில் குவிந்துள்ள பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள்
யானை வழித்தடத்தில் குவிந்துள்ள பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள்
யானை வழித்தடத்தில் குவிந்துள்ள பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள்
ADDED : பிப் 06, 2024 10:03 PM

பந்தலுார்;பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், அதிகளவில் யானைகளின் வலசை பாதைகள் அமைந்துள்ளன.
குறிப்பாக பந்தலுார் முதல் மாநில எல்லையான சேரம்பாடி சோலாடி வரையிலான, சாலையில் அனைத்து இடங்களிலும் யானைகள் வந்து செல்லும்.
இவ்வாறு யானைகள் சாலையை கடக்கும் பகுதியில் வனத்துறை சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், காபிகாடு என்ற இடத்தில், தமிழக- கேரளா யானைகள் வந்து செல்லும் முக்கிய வழித்தடம் அமைந்துள்ளது. அந்த இடத்தில் புதர்கள், வனம் மற்றும் தண்ணீர் வசதி இருப்பதால், யானைகள் முகாமிடும் முக்கிய இடமாக உள்ளது.
இந்நிலையில், காபி காடு நிழற்குடை பின்பகுதியில், அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள் வீசப்பட்டுள்ளன.
இந்த வழியாக யானைகள் வரும்போது, இதுபோன்ற கழிவுகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.