/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காபி தோட்டத்தில் புலிகள் நடமாட்டம்: கேமராவில் பதிவானதால் மக்கள் அச்சம்

ADDED : மார் 12, 2024 11:31 PM

கூடலுார்:கூடலுார் அருகே காபி தோட்டத்தில், புலி நடமாட்டம் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலுாரில் குறுமிளகு பறிக்கும் பணி நடந்து வருகிறது. தோட்டங்களில், குறுமிளகு திருட்டை தடுக்க, விவசாயிகள் காவலர்கள் நியமித்ததுடன், சிலர் சி.சி.டி.வி., கேமரா வைத்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், கூடலுார் ஓவேலி வன சோதனை சாவடி அருகே உள்ள, காபி தோட்டத்தில் குறுமிளகு திருட்டை கண்காணிக்க வசதியாக, 'சென்சார்' வசதியுடன் கூடிய கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகின்றனர்.
அந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, இரவில் தாயுடன் மூன்று புலி குட்டிகள் அப்பகுதியில் கடந்து செல்வது தெரிய வந்தது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி, உள்ளது. இச்சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த, வனவர் வீரமணி, மாரசாமி புலி நடமாட்டம் உள்ள தனியார் காபி தோட்டத்தில் நேற்று காலை ஆய்வு செய்தனர். இது தொடர்பாக அங்கு குறுமிளகு பறிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகளிடம் விசாரணை செய்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், ' அந்த பகுதியில் கண்காணிப்பு பணியை மேற்கொள்வதுடன், தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணிக்கப்படும்,' என்றனர்.