/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓட்டை விழுந்த நடைபாதை தடுமாறும் பாதசாரிகள்
/
ஓட்டை விழுந்த நடைபாதை தடுமாறும் பாதசாரிகள்
ADDED : டிச 16, 2025 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்: பந்தலுார் அருகே உப்பட்டி பஜார், நடைபாதை சேதமடைந்துள்ளதால் பாதசாரிகள் தடுமாறி விழும் நிலை தொடர்கிறது.
பந்தலுார் அருகே உப்பட்டி பஜார் சாலையை ஒட்டி, கழிவுநீர் கால்வாய் அமைத்து அதன் மேல் நடைபாதை போடப்பட்டு உள்ளது. இந்த நடைபாதை சேதமாடைந்துள்ளதால், இதனை கவனிக்காமல் செல்லும் பாதுசாரிகள் கால் இடறி விழுவதுடன், இரவு நேரங்களில், கால் சிக்கி விழுந்து வருகின்றனர்.
இதனால், சேதமான பகுதியில் சிவப்பு நிற கொடி கட்டப்பட்டு, பாதசாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இதனை நகராட்சி நிர்வாகம் சீரமைத்து தர வேண்டியது அவசியம்.

