/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காரமடை நகராட்சி கூட்டத்தில் 113 தீர்மானங்கள் நிறைவேற்றம்
/
காரமடை நகராட்சி கூட்டத்தில் 113 தீர்மானங்கள் நிறைவேற்றம்
காரமடை நகராட்சி கூட்டத்தில் 113 தீர்மானங்கள் நிறைவேற்றம்
காரமடை நகராட்சி கூட்டத்தில் 113 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : மார் 09, 2024 07:33 AM

மேட்டுப்பாளையம் : காரமடை நகராட்சியில் நகர்மன்ற அவசரக் கூட்டம் நகர்மன்ற தலைவர் உஷா தலைமையில், கமிஷனர் மனோகரன் முன்னிலையில் நடந்தது. இதில் 113 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரு தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.
ராமுகுட்டி (தி.மு.க.)
எல்.இ.டி. பல்ப் மின்கம்பங்களில் பொருத்துவதே இல்லை. 2 வருடம் ஆகிவிட்டது கோரிக்கை விடுத்து. பொருத்தவில்லை என்றால் அடுத்த கூட்டத்தில் போராட்டத்தில் ஈடுபடுவேன்.
வனிதா (அ.தி.மு.க.)
நாடாளுமன்ற தேர்தலை காரணம் காட்டி சாலை பணிகளை தாமதம்படுத்த வேண்டாம்.
கமல் (தி.மு.க.)
நகராட்சியில் எத்தனை மோட்டார்கள் உள்ளன. அவை எந்த ஹச்.பி. அளவுகளில் உள்ளன.
பொறியாளர் சோமசுந்தரம் : எனக்கு தெரியவில்லை. பார்த்து சொல்கிறேன்.
குருபிரசாத் (தி.மு.க.)
டி.பி.சி. அதாவது கொசு ஒழிப்பு பணியாளர்கள் தொடர்பாக அதன் ஒப்பந்ததாரருக்கு டெண்டர் முடிந்தும் கூட, மீண்டும் டெண்டர் விடாமல், 5 வது முறையாக பில் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏன் டெண்டர் வைக்கவில்லை. இந்த தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். துாய்மை பணிகள் சரிவர நடப்பது இல்லை.
செண்பகம் (தி.மு.க.)
துாய்மை பணியாளர்களுக்கு பி.எப்., பணம் பி.எப்., அலுவலகத்தில் செலுத்தப்படாமல் உள்ளது. அது எப்போது செலுத்தப்படும்.
கமிஷனர் மனோகரன்
அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் நிலுவையில் உள்ள பணம் முழுமையாக துாய்மை பணியாளர்களுக்கு செலுத்தப்படும்.
விக்னேஷ் (பா.ஜ.,)
காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு வருபவர்களுக்கு பார்க்கிங் வசதி இல்லாததால் பக்தர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி பார்க்கிங் வசதிக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.
பிரியா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
புதிதாக சாக்கடை வடிகால் வேண்டும் என 2 ஆண்டுகளாக கேட்டு வருகிறேன். ஆனால் இதுவரை அதற்கான பணிகள் நடக்கவில்லை என்றார்.
கூட்டத்தில் 113 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வீட்டுமனை வரையறை தொடர்பான ஒரு தீர்மானம் கவுன்சிலர்களின் எதிர்ப்பால் ஒத்திவைக்கப்பட்டது.
---

