/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குண்டும், குழியுமாக தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு இல்லாததால் பயணிகள் அதிருப்தி

ADDED : பிப் 25, 2024 11:01 PM

குன்னுார்;குன்னுார்- - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் செப்பனிடாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
குன்னுார்-- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு பல இடங்களிலும் பிரம்மாண்ட மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த இடங்களில் குழிகள் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, சாமன்னா பார்க், பாலவாசி, பிருந்தாவன், வெலிங்டன், பிளாக் பிரிட்ஜ், பாய்ஸ் கம்பெனி, காணிக்கராஜ் நகர், பிக்கட்டி உட்பட ஊட்டி வரையிலான சாலையில் ஏற்பட்ட குழிகளை சரிவர செப்பனிடாமல் உள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு வருகையின் போது, பெயரளவிற்கு இரு முறை சாலை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. எனினும் சில நாட்களில் சாலை பெயர்ந்து மீண்டும் பழைய நிலைக்கு மாறியது.
டிரைவர்கள் கூறுகையில்,'அமைச்சர்கள் வரும்போது மட்டுமே நெடுஞ்சாலை துறை சாலையை சீரமைக்கிறது. நாள்தோறும் இந்த சாலையில் வாகனங்களை ஓட்டி செல்ல சிரமம் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது.
கோடை சீசனில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகம் வரும்போது அதிக விபத்துகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.