/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாரதியார் நகரில் ஒரு வாரத்திற்குள் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்படும்; அரசு தலைமை கொறடா உறுதி

ADDED : ஜூலை 10, 2025 08:45 PM
ஊட்டி,; ''பாரதியார் நகரில் ஒருவாரத்திற்குள் பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்படும்,'' என, அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் உறுதியளித்துள்ளார்.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பாரதியார் நகரில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள், ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க, 2 கி.மீ., தொலைவில் உள்ள பிங்கர் போஸ்ட் பகுதிக்கு செல்ல வேண்டும்.
கடைக்கு செல்ல வனப்பகுதிக்கு இடையே செல்ல வேண்டும் என்பதால், வனவிலங்கு அச்சுறுத்தல், மோசமான சாலையால் மக்கள் அவதி அடைந்தனர். இப்பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை உட்பட அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, 'பாரதியார் நகர் பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை உட்பட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும்,' என, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது, ' அப்பகுதியின் அடிப்படை தேவைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்,' என, தெரிவித்தனர். குறிப்பாக, 'அப்பகுதியில் ஒரு வாரத்திற்குள் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டு வாரத்தில் இரண்டு நாட்கள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்,'என, அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் மக்களிடம் உறுதியளித்தார்.
ஆய்வின்போது, ஊட்டி ஆர்.டி.ஓ., சதீஷ், நகராட்சி பொறியாளர் சேகரன், தாசில்தார் சங்கர் கணேஷ், திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.