/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளியில் பெற்றோருக்கு பாதபூஜை அரசு பள்ளியில் பெற்றோருக்கு பாத பூஜை

ADDED : பிப் 08, 2024 10:35 PM

பெ.நா.பாளையம்,- துடியலூர் அருகே உருமாண்டம்பாளையத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில், குழந்தைகள் தங்கள் பெற்றோர் பாதங்களுக்கு பூஜை செய்தனர்.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சர்க்கரையப்பன், மாநகராட்சி கவுன்சிலர் சித்ரா தங்கவேலு ஆகியோர் முன்னிலை வைத்தனர். விழாவில், ஐந்தாம் வகுப்பு மாணவர்கள், எதிர்காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கி, நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்ல பயனுள்ள குடிமகனாக விளங்க, தங்கள் பெற்றோரின் பாதங்களுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
விழாவில், மாணவி தேஜாஸ்ரீ, நுரையீரல் செயல்படும் விதத்தையும், அதை எவ்வாறு பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் எடுத்து கூறினார். மாணவி ஹர்ஷினி, துரித உணவால் விளையும் தீமைகள், எவ்வகையான துரித உணவுகளை உண்ணலாம், எவற்றை தவிர்த்தல் நல்லது என்பது குறித்து விளக்கினார். விழாவை ஒட்டி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆண்டு விழாவை ஒட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் அழகு லட்சுமி நன்றி கூறினார்.