/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புதிய பஸ் ஸ்டாண்ட் பணிமனை திறப்பு
/
புதிய பஸ் ஸ்டாண்ட் பணிமனை திறப்பு
ADDED : பிப் 25, 2024 11:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்:கூடலுாரில், 5.42 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் பணிமனை திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவுக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில், நீலகிரி எம்.பி., ராஜா பஸ் ஸ்டாண்ட் மற்றும் பணிமனையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் அருணா, போக்குவரத்து துறை நிர்வாக இயக்குனர் ஜோசப் டையஸ், பொது மேலாளர் நடராஜன், கிளை மேலாளர் அருண் கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., திராவிடமணி, எல்.பி.எப்., சங்க நிர்வாகிகள் நெடுஞ்செழியன், உதயசூரியன் உள்ளிட்ட பங்கேற்றனர்.

