/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரண்டாம் நாளாக ஊட்டி தொட்டபெட்டா சிகரம் மூடல்
/
இரண்டாம் நாளாக ஊட்டி தொட்டபெட்டா சிகரம் மூடல்
ADDED : மே 07, 2025 11:50 PM
ஊட்டி : ஊட்டி தொட்டபெட்டாவுக்கு வந்த யானை நேற்று சின்கோனா வனப்பகுதியில் தஞ்சம் அடைந்தது.
ஊட்டி தொட்டபெட்டா காட்சி முனைக்கு கடந்த, 6ம் தேதி மாலை, 5:00 மணியளவில் காட்டு யானை ஒன்று நுழைய முயன்றது. யானையை பார்த்த சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை பாதுகாக்கும் நோக்கில் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றினர்.
சுற்றுலா பயணிகள், தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல கடந்த இரண்டு நாட்கள் அனுமதி இல்லை. தொடர்ந்து, நீலகிரி வன கோட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில், 'ரேஞ்சர்கள், வனக் காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், முதுமலையில் இருந்து யானைகளை விரட்டும் ஊழியர்கள்,' என, 40 பேர் கொண்ட குழு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை தொட்டபெட்டா சிகரத்தில் இருந்து கீழ்புறமாக நகர்ந்த யானை, சின்கோனா வனத்தில் உள்ள புதரில் தஞ்சம் அடைந்துள்ளது.
மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில்,''யானையை மயக்க ஊசி செலுத்தி பாதுகாப்புடன் பிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது. மற்ற விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்,'' என்றார்.

