/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் நடந்த வாகன விபத்து: இருவருக்கு தலா ஓராண்டு சிறை
/
ஊட்டியில் நடந்த வாகன விபத்து: இருவருக்கு தலா ஓராண்டு சிறை
ஊட்டியில் நடந்த வாகன விபத்து: இருவருக்கு தலா ஓராண்டு சிறை
ஊட்டியில் நடந்த வாகன விபத்து: இருவருக்கு தலா ஓராண்டு சிறை
ADDED : பிப் 02, 2024 10:36 PM
ஊட்டி;ஊட்டியில் நடந்த வாகன விபத்து வழக்கில் இருவருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஊட்டி பிஷப் டவுன் மகாத்மா காலனி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன் , 53, இவருடைய மனைவி வள்ளி. இவர்கள் இருவரும் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2018 ம் ஆண்டு பிப்., 21 ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் இருவரும் வந்து கொண்டிருந்தனர். ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்ட் முன் வந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த கார் கதவை குன்னுார் அதிகரட்டியை சேர்ந்த செந்தில் குமார் திடீரென்று திறந்து விட்டார்.
இதனால் சின்னப்பன் வந்த இருசக்கர வாகனம் கார் கதவு மீது மோதி சின்னப்பனும், வள்ளியும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த அரசு பஸ் வள்ளி மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஊட்டி மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செந்தில்குமார் மற்றும் அரசு பஸ் டிரைவர் பிரவீன் குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.
நேற்று நடந்த விசாரணை முடிவில், செந்தில்குமார் மற்றும் பிரவீன் குமாருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து, குற்றவியல் நீதித்துறை நீதிபதி தமிழினியன் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு செந்தில்குமார், 50 ஆயிரம் ரூபாயும், பிரவீன் குமார், 25 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கவும் உத்தரவிட்டார்.

