/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இடுபொருள் விற்பனையாளருக்கு ஓராண்டு பட்டய படிப்பு பயிற்சி
/
இடுபொருள் விற்பனையாளருக்கு ஓராண்டு பட்டய படிப்பு பயிற்சி
இடுபொருள் விற்பனையாளருக்கு ஓராண்டு பட்டய படிப்பு பயிற்சி
இடுபொருள் விற்பனையாளருக்கு ஓராண்டு பட்டய படிப்பு பயிற்சி
ADDED : அக் 03, 2024 11:52 PM
ஊட்டி : இடுபொருள் விற்பனையாளர்கள் ஓராண்டு பட்டய படிப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) லாவண்யா ஜெய சுதா அறிக்கை: தேசிய வேளாண் மேலாண்மை விரிவாக்க பயிற்சி நிலையத்தில் வேளாண் இடுபொருட்கள் பற்றிய அடிப்படை அறிவை இடுபொருள் விற்பனையாளர்களுக்கு அளிக்கும் வகையில், ஓராண்டு பட்டய படிப்பினை விரிவாக்க பயிற்சி நிலையம் மூலம் நடத்தி வருகிறது.
நீலகிரியில் உள்ள விருப்பமுள்ள இடுபொருள் விற்பனையாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்த படிப்பு சுயநிதி மூலமாகவும், மத்திய அரசின், 50 சதவீதம் மானிய நிதியுடன் நடத்தப்பட்டு வருகிறது.
நீலகிரியில் உள்ள இடுபொருள் விற்பனையாளர்கள் மற்றும் இடுப்பொருள் விற்பனை செய்திட ஆர்வமுள்ளோர் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும் தகவலுக்கு, ஊட்டியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தின், 0423 - 2442170 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்ப்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

